For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாம் தமிழரின் கட்சியில் பொதுச் செயலாளர் ஆகிறார் கயல்விழி.?அப்போ வாரிசு அரசியலை ஒழிப்பது எல்லாம் பொய்யா.?

03:34 PM Dec 27, 2023 IST | 1newsnationuser4
நாம் தமிழரின் கட்சியில் பொதுச் செயலாளர் ஆகிறார் கயல்விழி  அப்போ வாரிசு அரசியலை ஒழிப்பது எல்லாம் பொய்யா
Advertisement

தமிழக அரசியலில் மாற்று அரசியல் கட்சியாக விளங்கி வரும் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது ஆனால் மழை மற்றும் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுக்குழு வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்று நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பற்றி முக்கிய முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பொதுக் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் நிறுவனராக சீமான் இருந்து வருகிறார். மேலும் அந்தக் கட்சியின் தலைவராகவும் அவரே இருக்கிறார் .

நாம் தமிழர் கட்சியில் பொதுச் செயலாளராக தடா சந்திரசேகர் என்பவர் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவர் மறைந்ததை தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக தலைவர் சீமானின் மனைவி கயல்விழி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது .

முன்னாள் பொதுச் செயலாளர் தடா சந்திரசேகர் மறைந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களில் கயல்விழி சீமான் கலந்து கொண்டு வருகிறார் . இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் வருங்கால பொதுச் செயலாளராக கயல்விழி நியமிக்க படலாம் என்ற ஒரு கருத்தும் அந்த கட்சி வட்டாரங்களில் நிலவி வருகிறது. எனினும் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே முடிவு செய்யப்படும்.

Tags :
Advertisement