பெரியார் மண்ணில் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான்..!! திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்..!! ஈரோட்டில் பரபரப்பு..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக, நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த சில தினங்களாக பெரியா குறித்து சீமான் பேசி வரும் கருத்துக்கள், தமிழக அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிருகிறார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், இன்று காலை 2-வது நாளாக மரப்பாலம் பகுதியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் சூரம்பட்டி பகுதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக பரப்புரை செய்து வரும் சீமானுக்கு ஈரோட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சீமான் பரப்புரை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.