For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Seeman | நாம் தமிழர் கட்சி ’மைக்’ சின்னத்தில் போட்டி..!! சீமான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

01:26 PM Mar 27, 2024 IST | Chella
seeman   நாம் தமிழர் கட்சி ’மைக்’ சின்னத்தில் போட்டி     சீமான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Advertisement

'மைக்' சின்னத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

Advertisement

கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டு தேர்தல்களில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இம்முறை தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் சீமான் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேறு ஒரு கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் மின்னஞ்சல் வாயிலாகக் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையினை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். பின்னர், மைக்' சின்னத்தை அறிமுகம் செய்து வைத்த சீமான், ”2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த காலங்களில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டோம். எப்படியாவது அந்த சின்னத்தை வெற்றி பெற வேண்டும் என்று இறுதிவரை போராடினோம்.

சின்னத்தை இழந்தாலும் எண்ணத்தை இழந்து விடக்கூடாது என்று இதை விட சிறந்த சின்னம் இல்லை என்று முடிவு செய்து உள்ளோம். விவசாயி சின்னத்தையும் நான் கேட்கவில்லை மைக் சின்னத்தையும் நான் கேட்கவில்லை. தேர்தல் ஆணையம் தான் கொடுத்தது” என்று தெரிவித்தார்.

Read More : தேர்தல் பரப்புரையில் பரபரப்பு..!! பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல்நலக்குறைவு..!!

Advertisement