”சோ ராமசாமி செய்த அதே தவறை சீமானும் செய்திருக்கிறார்”..!! ”நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது பற்றி தெரியுமா”..? மூத்த பத்திரிகையாளர் பரபரப்பு தகவல்..!!
பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்தை மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, 52 ஆண்டுகளுக்கு முன்பாக பேசியதாக மூத்த பத்திரிகையாளர் மணி கூறியுள்ளார்.
பெரியார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், பெரியார் தொடர்பான விவாதத்திற்கு வரத் தயார் என்று சீமான் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், சீமான் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி கூறுகையில், ”பெரியார் குறித்து ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரியவில்லை. சீமான் பேசுவது தவறு. பேசுவதற்கான ஆதாரத்தை கேட்டால், நீங்கள் ஆதாரத்தை பூட்டி வைத்துள்ளீர்கள். நான் எப்படி கொடுப்பது என்று பதிலளிக்கிறார். இது தவறான, அராஜகமான பதில். 52 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒரு தலைவரை பற்றி ஒரு கருத்து சொல்கிறீர்கள்.
அப்படி சொல்லும் போது, உங்களிடம் ஆதாரம் இருக்க வெண்டும். ஆதாரம் இல்லாததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் ஏற்புடையதல்ல. சீமான் கூறிய கருத்தை மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியும் கூறி இருக்கிறார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் கூறியதாக சீமான் பேசியிருக்கிறார்.
பெரியார் அப்படி எங்கேயும் சொல்லவில்லை என்பது தான் உண்மை. இதற்கான அதாரம் சீமானிடம் இருக்க வேண்டும். இதே தவறை 1973ல் சோ ராமசாமியும் செய்தார். அப்போது திராவிடர் கழகம் சோ ராமசாமி மீது வழக்குத் தொடர்ந்தது. பின்னர், நீதிமன்றத்தில் சோ ராமசாமி மன்னிப்பு கேட்டார். பெரியாரின் அனைத்து எழுத்துக்களையும் பொதுவெளியில் வைக்க மறுக்கிறார்கள் என்பது நியாயமான குற்றச்சாட்டு தான். ஆனால், சீமான் பேசுவது சட்டப்படியும் தவறு தான்.
அவரின் கருத்துகள் தண்டனைக்குரிய குற்றம். இதனை ஏன் சீமான் செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், இது ஒரு அரசியல் தற்கொலை. பெரியாரை வழிக்காட்டியாக ஏற்கிறோம் என்று கூறியவர் சீமான். தற்போது பெரியார் சொல்லாத ஒன்றை சொல்லியதாக சீமான் பேசுவது தான் தவறு. பெரியாரை விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாம் தமிழருக்கு 8% வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில், அதனை கெடுத்து தலையில் மண்ணை போட்டுக் கொள்ளும் பணியை தான் சீமான் செய்கிறார். இதனால், நாம் தமிழர் கட்சிக்குள்ளும் அதிருப்தி நிலவுகிறது” என்று கூறியுள்ளார்.
Read More : ”எம்ஜிஆரே இதைத்தான் செய்தார்”..!! ”ஏன் விஜய்யால் செய்ய முடியவில்லையா”..? நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி..!!