For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சீசன் காய்ச்சலா.? கவலை வேண்டாம்.! இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடிச்சு பாருங்க.! எனர்ஜி ட்ரிங்க் ரெசிபி.!

06:10 AM Dec 15, 2023 IST | 1newsnationuser4
சீசன் காய்ச்சலா   கவலை வேண்டாம்   இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடிச்சு பாருங்க   எனர்ஜி ட்ரிங்க் ரெசிபி
Advertisement

தற்போது நாடெங்கிலும் கடுமையான குளிர்காலம் நடவி வருகிறது. இந்தக் குளிர் காலத்தில் ஏற்படும் சீசன் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீட்டிலேயே தயார் செய்யும் சூப்பரான ஒரு எனர்ஜி ட்ரிங்க் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இந்த பானம் செய்வதற்கு சிறிய துண்டு பசுமஞ்சள், சிறிது துண்டு இஞ்சி, 1/2 ஆரஞ்சு, 1 டீஸ்பூன் மிளகு மற்றும் பாதி எலுமிச்சை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் மஞ்சளை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் இஞ்சி, மஞ்சள், ஆரஞ்சு பழம் ஆகியவற்றை ஒரு மிக்சரில் போட்டு அவற்றுடன் ஒரு டீஸ்பூன் மிளகு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பின்னர் இதனை நன்றாக அரைத்து எடுத்து வடிகட்டினால் அருமையான எனர்ஜி ட்ரிங்க் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான பானம் ரெடி. இதனை தினமும் குடித்து வர நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இஞ்சியில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் மஞ்சளின் குர்குமின் ஆகியவற்றுடன் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சேர்ந்து நம் உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.

Tags :
Advertisement