தமிழ்நாட்டில் தீயாய் பரவும் ”ஸ்க்ரப்டைபஸ்” வைரஸ்..!! யாருக்கு பாதிப்பு அதிகம்..? அறிகுறிகள் என்ன..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
தமிழ்நாட்டில் ”ஸ்க்ரப்டைஃபஸ் அல்லது புஷ் டைபஸ்” என்ற புதிய பாக்டீரியா வைரஸ் பரவி வருகிறது. இது முதன்முதலில் 1930ஆம் ஆண்டு ஜப்பானில். ஒட்டுண்ணியான ஓரியன்டியா சுட்சுகாமுஷியால் ஏற்படும் ஒரு வகை டைபஸ் பாதிப்பு இதுவாகும். உலகம் முழுக்க பல நாடுகளில் அவ்வப்போது இந்த டைபஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், நம்மை கடித்தால் இந்த வைரஸ் ஏற்படும். சில சமயங்களில் பூச்சிகள் கூட இதனால் பாதிக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பூச்சிகள் கடிப்பதால் கூட நமக்கு “ஸ்கரப்டைபஸ்” ஏற்படும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திடீரென தற்போது இந்த பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சமீபத்திய மழை, குளிர்ந்த வெப்பநிலையைத் தொடர்ந்து RSV மற்றும் Covid-19 உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் ஸ்கரப் டைபஸ் (Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது.
சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, மூக்கு அடைப்பு, தலைவலி, தும்மல், தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கில் இருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல், சுவை இழப்பு, வாசனை இழப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். சிலர்க்கு உடலில் தடிப்புகள், வீக்கம் கூட ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளில் வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணிகள், பூச்சிக் கடிக்கும் உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். இந்த நோயை எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.
இந்த வைரஸ் பாதிப்பு உள்ளானவர்களுக்கு அசித்ரோமைசின் டாக்ஸிசைக்ளின் போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகள் அளித்து சிகிச்சையளிக்க வேண்டும். பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால் இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சையளிக்க வேண்டும்.
இந்நிலையில் தான், நெட்டிசன் ஒருவர் இந்த நோய் காரணமாக தனது தந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குணப்படுத்த கூடிய ஒன்றுதான். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும். முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை மேற்கொண்டால் இந்த நோயில் இருந்து குணமடையலாம் என்று பதிவிட்டுள்ளார். யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவுக்கு நிலை ஏற்படவில்லை. இந்த தொற்று குணமடைய நேரம் எடுக்கும். அறிகுறிகள் வலுவானவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : BREAKING | கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ரோகித் சர்மா..!! புதிய கேப்டனாக பும்ரா நியமனம்..!!