For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சுட்டெரிக்கும் வெயில்..!! EB போட்ட செம பிளான்..!! மக்களே இனி நிம்மதியா இருக்கலாம்..!!

11:06 AM Mar 04, 2024 IST | 1newsnationuser6
சுட்டெரிக்கும் வெயில்     eb போட்ட செம பிளான்     மக்களே இனி நிம்மதியா இருக்கலாம்
Advertisement

தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்சார தடை நடக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை மின்வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றன.

Advertisement

கடந்தாண்டு கோடை காலத்தில் மின் தடைகள் அதிகம் இருந்தது. அது ஆளும் திமுக மீது விமர்சனமாக மாறியது. இந்த முறை லோக்சபா தேர்தல் வேறு வரும் நிலையில், மின்சார தடை பிரச்சனையாக மாற கூடாது. இந்நிலையில், இந்தாண்டு அதேபோல் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்., அதேபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக 'மின் தடை' இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இபி தொடர்பான புகார்களை இனி செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. TANGEDCO என்ற செயலியில் இதற்கான வசதி உள்ளது. TANGEDCO செயலியை பயன்படுத்தி எளிதாக லாக் இன் செய்து உங்கள் புகாரை அளிக்கலாம்.

மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சனை 5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள், டிரான்ஸ்பார்ம் பிரச்சனைகளை 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அதை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக பிரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மின்சார வாரியம் இரண்டாக பிரிந்துள்ளது. மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாங்கேட்கோ) முறையாக இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிலக்கரி மற்றும் எரிவாயு அடிப்படையிலான அனல் ஆலைகளின் பராமரிப்பு உற்பத்தி உட்பட முழு செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்ளும்.

அதே நேரத்தில் TN பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் சிறந்த நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக மீட்டர் மற்றும் பில்லிங் உள்ளிட்ட விநியோக நடவடிக்கைகளைக் கையாளும். இதற்கிடையே, பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 3 வகையாக பிரிந்துள்ளது. இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால், அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.

Read More : Darling | ’பெண்களின் சம்மதம் இன்றி ”டார்லிங்” என அழைத்தால் அது குற்றம்தான்’..!! நீதிமன்றம் அதிரடி..!!

Advertisement