For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாட்டி வதைக்கும் வெயில் - பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்னை..! காரணமும்… தீர்வும்..

06:19 AM Apr 28, 2024 IST | Baskar
வாட்டி வதைக்கும் வெயில்   பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்னை    காரணமும்… தீர்வும்
Advertisement

கோடைக்காலங்களில் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இந்த கோடைக்காலத்தில் பல்வேறு பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக சிறுநீரக பிரச்னைகள் என்று வரும்போது, யூரினரி ட்ராக் தொற்றுக்கு நீங்கள் சிசிக்சையளிக்காவிட்டால், அது உங்களை பல்வேறு பிரச்னைகளுக்கு கொண்டு செல்லும்.

Advertisement

சிறுநீர் மண்டலத்தில் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, யுரித்ரா என எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொற்று ஏற்படலாம். பாக்டீரியா, சிறுநீர் பாதை வழியாக உள்ளே செல்கிறது. இது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. துர்நாற்றம் நிறைந்த சிறுநீர், வாந்தி, மயக்கம், தசைகளில் வலி, அடிவயிற்றில் வலி என அதன் அறிகுறிகள் உள்ளது. இதனால், காய்ச்சல் மற்றும் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது போன்றவை ஏற்படலாம்.இரண்டில் ஒரு பெண்ணுக்கு யூரினரி ட்ராக் தொற்று உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. ஆண்களைவிட இந்நோய் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இதற்கு காரணம் அவர்கள் பிறப்புறுப்பு சிறுநீர் மண்டலத்திற்கு மிக அருகில் இருப்பதுதான். தற்போது கோடை வெப்பத்தால், சிறுநீர் மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும். அதற்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாகும். இது கருப்பையையும் பாதிக்கும் என்பதால் பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

நீர்ச்சத்து குறைபாடு: கோடையில், வெப்பம் அதிகரிக்கும், இதனால் உடல் நீர்ச்சத்தை இழக்கும். அது கோடையில் உங்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான காரணம் ஆகலாம். குறைவான அளவு தண்ணீர் பருகி, சிறுநீர் குறைந்தால், பாக்டீரியாக்கள் உருவாகும். எனவே ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் பருகவேண்டும். தண்ணீர் உங்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.

சிறுநீரை கட்டுப்படுத்துவது: நீண்ட நேரம் சிறுநீரை கட்டுப்படுத்துவது, பாக்டீரியாக்கள் பல்கி பெருகுவதற்கு காரணமாகிறது. இது சிறுநீர் பாதை தொற்றுக்கு முக்கிய காரணியாக உள்ளது. எனவே கோடை காலத்தில் நாள் முழுவதும் தண்ணீர் பருகவேண்டும். 6 மணி நேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் இருக்கக்கூடாது.

இறுக்கமான ஆடைகள்: தளர்வான ஆடைகளை மட்டுமே உடுத்தவேண்டும். உடலை இறுக்கிப்பிடிக்கும் உடைகளை அணியக்கூடாது. குறிப்பாக கோடை காலத்தில் ஆடை விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்.
இறுக்கமான உள்ளாடைகள், பேன்ட்கள், உடற்பயிற்சி ஆடைகள் என அனைத்தும் உங்கள் பிறப்புறுப்புக்கு காற்றோட்டத்தைக் கொடுக்காது. அது பாக்டீரியாக்கை பிடித்து வைத்துக்கொள்ளும்.

கர்ப்பக் காலம்: கர்ப்ப காலத்தில் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவது பொதுவான ஒன்று. கருப்பையில் வளரும் கரு, சிறுநீர்ப்பைக்கு அழுத்தம் கொடுக்கலாம். கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பிறந்த பின்னரும் பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும். எனவே கர்ப்பிணிகள் இதுகுறித்து மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் சரியான சிகிச்சையை அவர்கள் வழங்க முடியும்.

தேன்நிலவு நீர்க்கட்டி வீக்கம்: முதன் முதலானக உடலுறவு வைத்துக்கொள்ளும்போது, சில பெண்களுக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம். இதுவும் பொதுவான ஒன்றுதான்.எனவே முதன்முதலில் உடலுறவு முடிந்த பின்னர், சிறுநீர் கழித்துவிட்டு, அதிகளவு தண்ணீரை பருகுங்கள். அது தொற்றுக்களை வெளியேற்றும் திறன் கொண்டது. இல்லாவிட்டால் உங்கள் மருத்துவரை அணுகி, ஆன்டிபயோடிக்குகள் எடுத்துக்கொள்ளுங்கள்.

மெனோபாஸ்: பெண்களின் பிறப்புறுப்பின் சருமம், மெனோபாஸ் காலத்தில் போதிய அளவு ஈஸ்ட்ரோஜென் கிடைக்காமல், மிகவும் கடினமாக இருக்கும். பெண்களின் யுரித்ரா, பிறப்புறுப்புக்கு மிக அருகில் இருக்கும். இதனால் அவர்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது. எனவே அடிக்கடி யூரினரி ட்ராக் இன்பெக்சன் ஏற்பட்டால், அதாவது 6 மாதத்தில் 2 முதல் 3 முறை ஏற்பட்டால், உடனடியாக அதற்கு சிகிச்சை தேவை. ரத்தம் மற்றும் சிறுநீர் கல்சர் பரிசோதனை செய்ய வேண்டும்.இதன் மூலம் தொற்றுக்கு காரணமான பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு தேவையான மருந்து வழங்கப்படும். தொடர்ந்து சோனோகிரஃபி செய்து சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையில் பின்விளைவுகள் ஏதேனும் உள்ளதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisement