முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு..!! எங்கு தெரியுமா..?

05:54 PM Nov 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

அசாம் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 35,775 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Advertisement

அசாம் மாநிலத்தில் டாக்டர் பனிகாந்தா ககாதி விருது என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, உயர்கல்வியில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வழங்கப்படுகிறது.

அதேபோல், 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வாகனம் வழங்கப்படுகிறது. அந்தவகையில், 35,775 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் 30ஆம் தேதியன்று ஸ்கூட்டர்கள் வழங்கப்பட இருக்கிறது.

இதில் 5,566 பேர் மாணவர்கள், 30,209 பேர் மாணவிகள் ஆவர். இதேபோல் பத்தாம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற 27,183 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 நவம்பர் 29ஆம் தேதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
12ஆம் வகுப்பு தேர்ச்சிஅசாம் மாநிலம்மாணவர்கள்ஸ்கூட்டர் பரிசு
Advertisement
Next Article