முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெருங்கிக் கொண்டிருக்கும் உலக அழிவு.!! 'Triple Whammy Extinction' எப்போது நிகழும்.? அறிவியல் ஆய்வாளர்கள் கணிப்பு.!!

05:36 PM May 01, 2024 IST | Mohisha
Advertisement

உலகம் முழுவதும் வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் கடுமையான வெயில் காலம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் மனிதர்களை அழிக்கும் "டிரிபிள் வாம்மி" நிகழ்வை மனிதகுலம் எப்போது சந்திக்கும் மற்றும் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்.? என விஞ்ஞானிகள் கனித்துள்ளனர்.

Advertisement

புவி வெப்பமடைதலின் தாக்கம் குறித்து வல்லுநர்கள் பல ஆண்டுகளாக மனிதர்களை எச்சரித்து வருகின்றனர். பூமி அதிகமாக வெப்பம் அடைவதால் உலகம் முழுவதும் உணவுப் பொருள் விநியோகத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும். கடல் மட்டம் உயர்வதோடு பூமி மனிதர்கள் வாழ முடியாத அளவிற்கு வெப்பமடையும் எனவே விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது மனித குலத்தை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

புவி வெப்பமயமாதல் பற்றி பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு நேச்சர் ஜியோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வின்படி பூமி அதிக வெப்பமயமாகி வறண்டு வாழத் தகுதியற்ற நிலப்பரப்பாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூமியின் அனைத்து நிலப்பரப்புகளும் ஒன்றிணைந்து ஒரு மிகப்பெரிய நிலமாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், விஞ்ஞான வல்லுநர்கள் டூம்ஸ்டே கடிகாரத்தைப் புதுப்பிக்கிறார்கள், இது உலகளாவிய பேரழிவிற்கு மனிதகுலம் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும் உலகம் தற்போது நிலையற்றதாக இருக்கிறது.

இந்த ஆய்வில் தொலைதூர எதிர்காலத்தின் காலநிலை மாதிரிகளை கொண்ட முதல் சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த கம்ப்யூட்டரின் தகவலின் படி உலகில் அதிக எரிமலை வெடிப்புகள் உருவாகும். இவை அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடும். இதனால் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும். சூரியன் மிக உஷ்ணமாகவும் பிரகாசமாகவும் வானத்தில் இருக்கும். இதனால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து 40 டிகிரி முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம்.

ஆய்வின் முதன்மை ஆசிரியரும், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளருமான அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த்,"புதிதாக உருவான சூப்பர் கான்டினென்டலிட்டி விளைவு வெப்பமான சூரியன் மற்றும் வளிமண்டலத்தில் அதிக கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் வாம்மியை திறம்பட உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் தற்போது நிலவும் மோசமான சூழல் காரணமாக பூமியில் வாழும் பாலூட்டிகளுக்கு நீர் ஆதாரம் மற்றும் உணவு இல்லாத நிலை உருவாகும். நாற்பது முதல் 50 டிகிரி செல்சியஸ் வரையிலான பரவலான வெப்பம் மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக மனிதன் மற்றும் பல்வேறு விதமான உயிரினங்களின் தலைவிதி முடிவுக்கு வரும் என குறிப்பிட்டு இருக்கிறார். அதிகப்படியான வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமல் உயிரினங்கள் மடியும் சூழல் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வின்படி புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினாலும் மனிதகுலம் அழிவதை தடுக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மனித இனம் டிரிபிள் வாம்மி நிகழ்வு வரை தாக்குப் பிடித்தாலும் மொத்தமாக அழிக்கப்படும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி டிரிபிள் வாம்மி நிகழ்வு நடைபெற 250 மில்லியன் ஆண்டுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது .

இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய ஆராய்ச்சியாளருமான டாக்டர் யூனிஸ் லோ கூற்றுப்படி "பசுமை இல்லத்தின் மனித உமிழ்வுகளின் விளைவாக ஏற்படும் நமது தற்போதைய காலநிலை நெருக்கடியை இழக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்.250 மில்லியன் ஆண்டுகளில் வாழ முடியாத கிரகத்தை நாம் கணித்துக்கொண்டிருக்கும் வேளையில், இன்று நாம் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தீவிர வெப்பத்தை அனுபவித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Read More: SMART Missile | இந்திய தயாரிப்பு நீர் மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி.!! இதன் சிறப்பம்சங்கள் என்ன.?

Tags :
Bristol UNiversityDoom's DayTriple Whammy Effect
Advertisement
Next Article