HIV | ஆய்வக சோதனையின் மூலம் அழிக்கப்பட்ட எய்ட்ஸ் கிருமி .!! மருத்துவ உலகின் புதிய சாதனை.!!
ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வக சோதனையின் போது பாதிக்கப்பட்ட உயிர் அணுக்களை கொண்டு எச்ஐவி கிருமியை அழித்ததாகக் தெரிவித்துள்ளனர். இது மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மருத்துவ முறை Crispr என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கத்திரிக்கோலை போன்று செயல்படுகிறது. எச்ஐவி வைரஸில் இருக்கும் டிஎன்ஏக்களை கிரிஸ்ப்ர் குறிப்பிட்ட என்சைம்களைப் பயன்படுத்தி வெட்டுகிறது.
இந்த ஆய்வின் ஆசிரியரான டாக்டர். எலினா ஹெர்ரேரா-கரில்லோவின் கருத்துப்படி இந்த புதிய தொழில்நுட்பம் வைரஸை கண்டுபிடித்து அழிக்கக் கூடியது என தெரிவித்திருக்கிறார். டாக்டர் கரில்லோவின் கருத்தை மேற்கோள் காட்டிய தி சன் பத்திரிக்கை எச்ஐவி நோய்க்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கூறுவதற்கு இது மிகவும் ஆரம்ப கட்டம் மட்டுமே. எனினும் அதற்கான ஆரம்ப கண்டுபிடிப்புகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன என தெரிவித்துள்ளது.
95 சதவீதத்திற்கும் அதிகமான பிரித்தானியா மக்களிடையே இந்த வைரஸ் பரவல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. வைரஸ் தொற்று அவர்களின் ரத்தத்தில் காணப்படுவதில்லை மேலும் பிறரிடம் இருந்து அவர்களுக்கு பரவுவதும் இல்லை. இதற்கு வளர்ச்சி அடைந்த மருத்துவ தொழில் நுட்பமே முக்கிய காரணமாக இருக்கிறது. எனினும் அவர்களது ஆரோக்கியமான வாழ்விற்கு நீண்ட காலம் மருந்து தேவைப்படுகிறது. ஆனால் தங்கள் நோயைப் பற்றி அறியாதவர்கள் மற்றும் சுகாதார வளர்ச்சி இல்லாத வளர்ச்சியடையாத நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்த நோய் மிகப்பெரிய ஆபத்தாகவே இருக்கிறது.
எச்ஐவி குணப்படுத்துவது மிகவும் கடினமாக இருப்பதற்கு காரணம் இந்த நோய்க்கிருமிகள் நோயாளியின் மரபணுக்களில் தன்னை உட்பொதித்த பிறகு, கண்டறிய முடியாத சிறிய பெட்டிகளில் ஒளிந்து கொள்வதாகவும். எச்ஐவி செல்களை குறிவைத்து அவற்றை தாக்கி அழிப்பதே எங்களது அடுத்த நோக்கம். பாதுகாப்பு மற்றும் செயல் திறனுக்கு இடையேயான சமநிலையை ஏற்படுத்துவதே எங்கள் குறிக்கோள் என ஹெர்ரெரா-கரில்லோ கூறினார்.
டாக்டர் ஹெர்ரெரா-கரில்லோவால் தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மிகப்பெரியது, மேலும் உயிருள்ள பொருளின் மீது கணிசமான செல் சேதத்தை ஏற்படுத்தலாம். இந்த புதிய சிகிச்சை முறையான Crispr மரபணு எடிட்டிங் மூலம் புற்றுநோய் டிமென்சியா குருட்டுத் தன்மை மற்றும் பரம்பரை கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஃபிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டாக்டர். ஜொனாதன் ஸ்டோய், "எச்.ஐ.வி நோய்க்கிருமிகளை அழிக்க Crispr-Cas9 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எய்ட்ஸ் சிகிச்சைக்கான யோசனை மகத்தான ஈர்ப்பைக் கொண்டுள்ளது" என்று தி சன் பத்திரிக்கை அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். எனினும் அவர் இந்த ஆராய்ச்சியில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.