விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!!
தொடர் கனழை மற்றும் , வெள்ள நீர் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ( December 4 ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்தது பெஞ்சல் புயல் ஒருவழியாக புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆனால் கரையைக் கடந்தும் வலுவிழக்காமல் வட தமிழ்நாட்டின் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மையம் கொண்டு பெருமழையைக் கொட்டித் தீர்த்துவிட்டது. விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செமீ மழையை கொட்டித் தீர்த்துவிட்டது இந்த பெஞ்சல் புயல்.
இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வரலாறு காணாத பெருவெள்ளத்தில் சிக்கின. அத்தனை அணைகளும் நிரம்ப, உபரி நீர் பெருமளவு திறந்துவிட ஆறுகளின் கரைகளை தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் விழுப்புரம் மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னை- திருச்சி இடையே ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் கேரளாவின் வயநாட்டை நினைவுபடுத்தும் வகையில் பயங்கர நிலச்சரிவும் நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிருடன் புதையுண்டு போயினர். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டமும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.
இந்நிலையில் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகளும், மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முகாம் அமைத்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (4ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
Read more ; கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய குடும்பத்தோடு சென்று பெண் கேட்ட பிரபல நடிகர்..! ஆனா நடந்ததே வேற..