"அவன் எனக்கு மட்டும் தான்" ஒரே வாலிபருக்காக அடித்துக்கொண்ட பள்ளி சிறுமிகள்..
செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாக வாலிபர்களும், சிறுவர்களும் மன ரீதியான பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக தான், சமீபத்தில் 9 வயது சிறுவன் 5 வயது சிறுமியை செல்போன் பார்த்து கற்பழித்துள்ளான். இப்படி செல்போன் பார்த்து ஒழுக்க சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
அந்த வகையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், உத்திரபிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு சிறுமிகள் ஒரே வாலிபரை காதலித்து வந்துள்ளனர். இது குறித்து முதலில் இருவருக்கும் தெரியாத நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஒரே வாலிபரை விரும்புவதை அறிந்த இரண்டு சிறுமிகளும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள, பரபரப்பான சாலை ஒன்றில், ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து தாக்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், சிறுமிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். ஆனாலும் அந்த சிறுமிகள் ஒருவர் ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.