பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ராஜினாமா செய்யணும்..!! வலுக்கும் கோரிக்கை..!!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து சமூக வலைதளங்களில் பரவலான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, அவற்றை நன்றாக செயல்படுத்தியும் வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சில நாட்களுக்கு முன் 'கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், பரம்பொருள் ஃபௌண்டேஷனை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் ஆன்மீகம், மறுபிறவி, பாவ - புண்ணியம் போன்ற கருத்துக்களைப் பற்றி பேசினார். இந்த கருத்துக்களுக்கு ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் சோசியல் மீடியாக்களில் வைரலாகின.
ஒரு பள்ளியில் இதுபோன்ற ஆன்மிக போதனைகள், பாவ புண்ணியங்கள் பற்றியெல்லாம் பேசலாமா? அரசுப் பள்ளி என்ன ஆர்.எஸ்.எஸ் கூடாராமா? என்று பல கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இது மிகவும் தவறான விஷயம் என்றும், அன்பில் மகேஷ் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா, அன்பில் மகேஷிற்கு ஆதரவாக பதிவிட்டிருக்கிறார். அதாவது, "அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் X வலைதள பயன்பாட்டாளர்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள். ஒரு மாநில அமைச்சரையே இத்தனை தரக்குறைவாக பேசும், எழுதும் சமூக விரோதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்பில் மகேஷ் பேசியதாவது, "தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தவறைத் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், தண்டனை என்பது உறுதி. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த சொற்பொழிவு நிகழ்வுக்கு பின்னர் தலைமை ஆசிரியர் காரணமா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரி காரணமா? என்பது இன்னும் 3, 4 நாட்களில் விசாரணையில் தெரிந்துவிடும்.
நான் மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன். பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சாளரை பேச வைப்பது நல்ல விஷயம் தான். இருந்தாலும் வருவது யார், அவருடைய பின்னணி என்ன என அறிந்து தான் பள்ளிக்கு ஆசிரியர்கள் அவரை அழைத்து வந்திருக்க வேண்டும்" என்று பேசினார்.