முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Smokey Biscuit | ஸ்மோக்கி பிஸ்கட் சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.!!

04:55 PM Apr 21, 2024 IST | Mohisha
Advertisement

Smokey Biscuit: ஸ்மோக்கி பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திரவ நைட்ரஜனை குழந்தைகளுக்கு மத்தியில் பயன்படுத்துவதற்கு எதிரான வீடியோவை நிட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

Advertisement

பொது இடத்தில் சிறுவன் ஸ்மோக்கி பிஸ்கட் சாப்பிடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அந்த பிஸ்கட்டை சாப்பிட்ட நேரத்தில் சிறுவனின் உடல்நிலை மோசம் அடைவதும் அந்த சிறுவன் உதவிக்காக கூச்சலிடுவதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

திரவ நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஸ்மோக்கி பிஸ்கட்(Smokey Biscuit) சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பலரும் குழந்தைகளுக்கு இது போன்ற ஸ்மோக்கி பிஸ்கட்களை வாங்கி கொடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கமெண்ட் செய்துள்ள ஒரு பயனர் -196 டிகிரி செல்சியஸில் குளிர்விக்கப்பட்ட திரவ நைட்ரஜன் வயிற்றுக்குள் சென்றதும் வேதிவினை புரிந்து மூச்சு திணறல் ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

மற்றொரு பயனர் இது போன்ற மீதி பொருட்களை உணவாக பயன்படுத்துவது நிச்சயமாக மரணத்தை ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மோகன்.ஜி தனது எக்ஸ் சமூக வலைதளம் மூலமாக இச்சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கும் அவர் இது போன்ற பொருட்களை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். பிஸ்கட்டில் இருந்து வரும் புகையை பார்த்து குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பார்கள். இது போன்ற பொருட்களை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

Read More: Heart Attack | மாரடைப்பை தடுக்க தினமும் கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்.!!

Tags :
Boy DiedLiquid Nitrogenmohan gSmokey Biscuits
Advertisement
Next Article