முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செம வாய்ப்பு...! விவசாயிகளுக்கு ரூ‌.6,000 வழங்கும் திட்டம்... வரும் 21-ம் தேதி வரை சிறப்பு முகாம்...!

06:30 AM Feb 14, 2024 IST | 1newsnationuser2
Advertisement

விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தில் இதுவரை பயனடையாமல் உள்ள தகுதியுள்ள விவசாயிகளை சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

Advertisement

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொருத்து அவர்களுக்கு 15 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் இதுவரை சேராத நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளை சேர்த்து பயனடையச் செய்யும் பொருட்டும், ஏற்கனவே திட்டத்தில் உள்ள பயனாளிகள் eKYC பதிவுகள் மேற்கொள்ள வசதியாக 12.02.2024 முதல் 21.02.2024-ஆம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாம் குறித்து சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்களை அணுகி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

Tags :
central govtfarmersPm kissanpm yojanaSalem dt
Advertisement
Next Article