அரசுப் பணிகளில் துரோகம் இழைக்கப்படும் SC மற்றும் ST பிரிவினர்.! களத்தில் குதிக்கும் காங்கிரஸ்.!
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் எஸ்சி அணியினரின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அந்த அணியின் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் வங்கிப் பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மத்திய அரசு பணிகளில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். குறிப்பாக அரசு உதவி பெறும் வங்கிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பான முழு புள்ளி விவரங்களையும் தனது அறிக்கையில் பதிவு செய்திருக்கும் அவர் சமீபத்தில் நிரப்பப்பட்ட வங்கிப் பணியிடங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு எதிராக மிகப்பெரிய சதி நடந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். கனரா வங்கியில் முத்தம் உள்ள 49 பணியிடங்களில் எஸ்சி பிரிவினருக்கு ஏழு பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 29.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. இந்த சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு சனதான அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.