'25 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த SBI நிறுவனம்!' என்ன காரணம் தெரியுமா?
எஸ்பிஐ வங்கியின் அதன் மொத்த பணியாளர் எண்ணிக்கை கடந்த 5 வருடத்தில் 10% குறைத்துள்ளது, இதன் மூலம் சுமார் 25,000 ஊழியர்கள் குறைக்கப்பட்டு உள்ளனர்.
பங்குச் சந்தையில் எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த தகவல்கள் படி மார்ச் 31, 2024 நிலவரப்படி எஸ்பிஐ வங்கியின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,32,296 ஆக இருந்தது. ஆனால், 2019 ஆம் நிதியாண்டின் இறுதியில் இந்த எண்ணிக்கை 2,57,252 ஆக இருந்தது. அட்ரிஷன் விகிதத்தை எஸ்பிஐ கொண்டிருந்தாலும் இந்த பணியாளர் எண்ணிக்கைக் குறைப்பு நடந்துள்ளது, கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது.
2024ஆம் நிதியாண்டின் முடிவில் எஸ்பிஐ ஊழியர் வெளியேற்ற விகிதம் வெறும் 1.43 சதவீதமாகவே இருந்தது. இதேவேளையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் 10 சதவீதத்தைத் தாண்டுகிறது. 2019 நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5,000 ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இதில் 2023 நிதியாண்டில் அதிகபட்சமாக 8,392 ஊழியர்கள் குறைக்கப்பட்டு உள்ளனர்.
2020 நிதியாண்டில் ஒரு ஊழியருக்கு 5.8 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டிய எஸ்பிஐ, 2024 நிதியாண்டில் ஒரு ஊழியருக்கு 26.2 ரூபாய் லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இந்த ஒரு விஷயம் போதாத என்ன!!. 2022 முதல் 2024 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், எஸ்பிஐயின் நிகர லாபம் ₹61,077 கோடி ஆக, ஆண்டு வளர்ச்சி விகிதம் 44% ஆக இருந்தது.
அதே நேரத்தில், 2024 நிதியாண்டில் எஸ்பிஐ-யின் ஊழியர் செலவுகள் 24 சதவீதம் அதிகரித்து 71,237 கோடி ரூபாய் ஆக உயர்ந்தது. மேலும், 12வது இருதரப்பு சம்பள உடன்பாட்டுத் தீர்வைக் கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் வங்கி 13,387 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டை எஸ்பிஐ நிர்வாகம் வழங்கியுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கைக் குறைப்பு மூலம் இவ்வங்கியில் லாபத்தை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது முக்கியமான விஷயமாகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். குறைந்த பணியாளர் எண்ணிக்கையுடன் லாபத்தை அதிகரிக்கும் இந்த உத்தி எதிர்காலத்தில் எஸ்பிஐக்கு எவ்வாறு பலன் தரும் என்பதைப் பொறுத்திருந்து காண வேண்டும்.
Read More ; ரூ.34,000 கோடி வங்கிக்கடன் மோசடி! DHFL நிறுவன இயக்குநர் அதிரடி கைது…!!