நாடே அதிர்ச்சி!. 25 வயது ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை!. டேட்டா கேபிளால் தூக்கிட்டு விபரீதம்!. காதலன் கைது!.
Air India pilot: மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் 25 வயது ஏர் இந்திய நிறுவனத்தின் பெண் விமான தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சிருஷ்டி துலி. 25 வயதான இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் பெண் விமானியாக பணிபுரிந்து வருகிறார். சிருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் வணிக விமானி உரிமத்திற்கான பயிற்சியின் போது ஆதித்யா பண்டிட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில், பணிநிமித்தமாக, ஜூன் 2023 முதல் வேலை நிமித்தமாக சிருஷ்டி மும்பையில் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் வாடகை வீட்டில் இருவரும் 5 நாட்கள் வசித்து வந்ததாகவும், கடந்த 25ம் தேதி அதிகாலை 1 மணியளவில், பண்டிட் காரில் டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து, சிருஷ்டி பண்டிட்டை தொடர்புகொண்டு தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினார், இதனால் அவர் மும்பைக்குத் திரும்பினார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பண்டிட், சிருஷ்டியின் தோழி உர்வி பாஞ்சாலையை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.
இருவரும் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது டேட்டா கேபிளில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிருஷ்டியை மீட்டு, அந்தேரி கிழக்கில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு பரிசோதித்த பிறகு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிருஷ்டியின் உறவினர்கள், பண்டிட் மீது புகார் அளித்தனர்.
அதாவது, சிருஷ்டியை பண்டிட் அடிக்கடி பொது இடங்களில் துன்புறுத்தியதாகவும் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டினர். மேலும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்துமாறு வற்புறுத்தியதாகவும், சிருஷ்டியின் உறவினர்கள் பலர் பண்டிட்டின் தவறான நடத்தையை நேரில் பார்த்ததாகக் கூறினர். இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவரது 27 வயது காதலன் ஆதித்யா பண்டிட்டை போவாய் போலீஸார் கைது செய்தனர்.நீதிமன்றம் அவரை நவம்பர் 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.
Readmore: ஆஹா!. வெப்பத்தை தடுக்கும் கூலிங் கண்ணாடி கண்டுபிடிப்பு!. ஐஐடி இந்தூர் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!