For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

SBI வங்கியில் கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! ரூ.48,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!

State Bank of India, India's largest public sector bank, has issued a recruitment notification to fill vacant posts.
08:50 AM Jan 16, 2025 IST | Chella
sbi வங்கியில் கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்     ரூ 48 000 சம்பளம்     விண்ணப்பிக்க இன்றே கடைசி
Advertisement

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Advertisement

காலியிடங்களின் எண்ணிக்கை : 600

கல்வித் தகுதி : 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 30.04.2025-க்குள் தேர்ச்சி பெற வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.04.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை உண்டு.

சம்பளம் : அடிப்படை சம்பளம் ரூ.48,480

தேர்வு செய்யப்படும் முறை :

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி..?

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
https://sbi.co.in/web/careers/current-openings அல்லது https://ibpsonline.ibps.in/sbiponov24/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் கொடுக்கப்படும். அதனைக் கொண்டு உள்நுழைந்து புகைப்படம் மற்றும் கையொப்பத்தைத் பதிவேற்ற வேண்டும். பின்னர் உங்கள் தனிpபட்ட விவரங்கள், கல்வி விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிடவும். அடுத்ததாக கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2025

Read More : அண்ணாமலையின் ஆட்டம் முடிகிறதா..? அடுத்த பாஜக தலைவர் இவரா..? வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tags :
Advertisement