இந்த ஒரு எண்ணெய் போதும், வழுக்கை தலையில் கூட அடர்த்தியாக முடி வளரும்..
தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்வு தான். இதனால் பலருக்கு 30 வயதிலேயே வழுக்கை தலை வந்துவிடுகிறது. இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் முடி இல்லாத போது, ஒருவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களின் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர். அப்படி நீங்களும் கவலைப் படுகிறீர்களா? இனி கவலையே வேண்டாம். நீங்கள் இழந்த முடியை விட, அதிக முடியை வளரச் செய்யும் அற்புத மருந்து ஒன்று உள்ளது. ஆம், அந்த அற்புத மருந்து பரங்கிக்காய் விதை எண்ணெய் தான்.
உங்கள் தலைமுடியை வளர்க்க பரங்கிக்காய் விதை எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த இயற்கை தீர்வாகும். பரங்கிக்காய் விதை எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் முக்கிய ஃபேட்டி ஆசிட்கள் உள்ளதால், அது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து வலுகொடுக்கும். இதற்கு முதலில், பரங்கி விதை எண்ணெயை சூடாக்கி, அதை தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இது அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
நீங்கள் இந்த பரங்கிக்காய் விதை எண்ணெயை, நேரடியாக தலையில் தேய்க்காமல், தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்க்க வேண்டும். எண்ணெய் நங்கு ஊறிய பிறகு, ஷாம்பூ போட்டு தலையை நன்கு அலசுங்கள். வாரத்தில் 2 முதல் 3 முறை தொடர்ந்து இந்த எண்ணெய் பயன்படுத்தினால், நாளடைவில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். முடி உதிர்தலுக்கு காரணமான டிஹெச்டி என்ற ஹார்மோனை பரங்கிக்காய் விதைகள் தடுத்துவிடும். இதனால் உங்கள் முடி கட்டாயம் அடர்த்தியாக வளரும்.
Read more: நோய் இல்லாமல் வாழ ஆசையா? அப்போ இனி கடையில் இட்லி மாவு வாங்குவதை உடனே நிறுத்துங்க!!