மழை நீரை சேமிச்சி வெச்சிக்கோங்க!… அழகுக்கு அழகு சேர்க்கும்!… எப்படி தெரியுமா?
பருவ காலம் மாறிவர மழை எப்போ பெய்யும்னே நமக்கு தெரியறதில்ல. முன்னாடிலா பருவ மழைனு ஒன்னு காலம் காலமாக பெய்துட்டு இருந்துச்சி. ஆனால், இப்போ அப்படிலா இல்ல. மக்கள் தொகை பெருக்கத்தால் மரங்கள் வெட்டப்படுது. இதன் விளைவாக மழையும் குறைஞ்சிட்டே வருது. அப்படியே மழை வந்தாலும் அது "அமில மழை"-யாகதான் முதலில் வரக்கூடும். எனவே முதலில் பெய்யும் மழையில் நனைவதை தவிர்ப்பதே நல்லது. அதன்பிறகு வரக்கூடிய மழை தண்ணீய சேமிச்சி வைச்சிக்கோங்க. ஏன்னா,அது உங்கள் அழகுக்கு அழகு சேர்க்க பயன்படும். இந்த மழை நீருல சீரான pH அளவு இருப்பதால் சருமத்துக்கு அதிக ஈரப்பதத்தை தந்து மென்மையான முக பொலிவை தருகிறது. அதோடு சேர்த்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் இந்த மழை நீர் ரொம்ப உதவியாக இருக்கு.
முல்தானி மட்டியை முகத்தில் பூசினால், வெண்மையான, முகப்பருக்கள் நீங்கிய, பளபளப்பான முகம் உங்கள் முகமாகத்தான் இருக்கும். இந்த முல்தானி மட்டியை சேமித்து வைத்த மழை நீரோடு கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் பூசி கொண்டு , காலையில் அதனை கழுவி எடுத்தாலே முகத்தில் உள்ள முகப்பருக்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். ஆன்டி ஏஜிங் பொருட்கள் அதிகம் உள்ள இந்த மைசூர் பருப்பை 1/4 கப் எடுத்து கொண்டு பவுடராக அறைத்து கொள்ளவும்.அதிலிருந்து 1 டீஸ்பூன் எடுத்து கொண்டு 1 டீ பேகில் உள்ள டீ தூளை எடுத்து அதில் சேர்த்து கொள்ளவும். பிறகு மழை நீரை அத்துடன் நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் வாரத்திற்கு 2 முறை பூசி வர முகம் மிக அழகாவும்,பொலிவுடனும் மின்னும். மேலும் இழந்த இளமை சருமத்தை பெற்று விடலாம்.
பொலிவான முகம் பெற வேண்டுமென்றால்,அதற்கு சிறந்த பியூட்டி டிப் : மழை நீருடன் கற்றாழையை சேர்த்து முகத்தில் பூசுவதே. அதற்கு கற்றாழை ஜெல்லை 1 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, அத்தோடு ஆரஞ்ஜ் சாற்றை 5 முதல் 10 சொட்டு சேர்த்து நன்கு கலக்கவும். 10 நிமிடம் கழித்து அதில் மழை நீரை சேர்க்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் பண்ணவும். பிறகு இதனை 20 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும். கடைசியாக காட்டன் துணியில் துடைத்துவிடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வர சொர சொரப்பாக இருந்த முகம் மிகவும் பொலிவுடனும், அழகாகவும் மாறும். மேலும் முகத்தில் உள்ள அடைந்த துளைகள் திறக்கவும் செய்யும்.
நம் முகத்தின் அழகை கெடுப்பதில் இந்த கரும்புள்ளிகள் முதல் இடத்தில் உள்ளது. எவ்வளவோ கிரீம்கள், ஃபேஸ் பேக்கள் போட்டாலும் இவை மறையவே இல்லைனு கவலையா..? இதோ உங்களுக்காக அற்புதமான ஒரு மழை வைத்தியம்… ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.இந்த வெள்ளை கரு, சருமத்தை திடமாக வைத்து கொள்ள உதவுகிறது. அதனுடன் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் நிறைந்த தேன் கலந்து நன்கு கலக்கவும்.அத்துடன் மழை நீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சிறிது கலந்து மீண்டும் கலக்கவும்.பின்பு அதனை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து அதே மழை தண்ணீரில் கழுவி விடவும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து போகும்.
வயது ஆக ஆக முகமும் மிக மங்கலாக,சுருக்கங்கள் நிறைந்து தெரிகிறதா..? இதோ உங்களுக்கான ஒரு அழகிய மழை நீர் குறிப்பு. 3-4 டீஸ்பூன் தயிரை எடுத்து கொண்டு அதோடு சிறிது ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். பின்பு 1 டீஸ்பூன் மழைநீர் ,சிறிதளவு பாதாமை தூளாக பொடி செய்து அதனுடன் சேர்த்து கொண்டு நன்கு கலக்கி பின்பு முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து இதனை மிதமான சுடு தண்ணீரில் கழிவி விடவும். இவ்வாறு செய்வதால் முகம் சுருக்கமின்றி அழகாக மாறும். 1/2 கப் பப்பாளியை எடுத்து அதனை நன்றாக மிக்சியில் அரைத்து கொண்டு ,பின்பு அதனோடு 1/2 கப் வாழைப்பழத்தையும் சேர்த்துஅரைத்து கொள்ளவும். அவற்றை நன்கு மிக்ஸ் செய்த பின்னர் சிறிதளவு மழை நீரையும் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் மிக வெண்மையாக பளிச்சென்று இருக்கும்.