சமோசா, ஜெல்லி முதல் நெய் வரை.. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட இந்திய உணவுகள்..! முழு விவரம்…
இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக கருத்தப்படும் சமோசா, ஜெல்லி, ச்வீங்கம்(ChewingGum) உள்ளிட்டவை சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
சமோசா: இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் சமோசா முக்கிய இடம் வகிக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் மசாலா சமோசா, வெங்காய சமோசா என பல வகையான சுவைகளில் கிடைக்கிறது. அதிலும் மிக முக்கியமாக ஈவினிங் சினாக்ஸ் வகைகளில் சமோசா முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சமோசா வித் டீ, காஃபி பெரும்பாலானோரின் தேர்வாக உள்ளது. ஆனால், இந்த சமோசாவுக்கு சோமாலியா நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமோசா முக்கோண வடிவில் இருப்பதாலும், அது கிறிஸ்தவ மதத்தை குறிக்கும் குறியீடு என்று அல்ஷாபாப் என்ற தீவிரவாத அமைப்பு சமோசாவிற்கு தடை விதித்துள்ளது.
ச்வீங்கம்(ChewingGum ): Chewing இந்தியாவில் மிகவும் பிரபலமானது.அனைத்து கடைகளிலும் மிக எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்று. இந்த ChewingGum வகைகள் 1992ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது. இதில், செயற்கையான Gum மற்றும் காய்கறிகளின் மூலமாக செய்யப்பட்ட Gum-யை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட ChewingGum வகைகளை சிங்கப்பூர் அரசு தடை செய்துள்ளது.
நெய்:: இந்தியாவில் ஆரோக்கியமான ஒன்றாக நெய் பார்க்கப்படுகிறது. இனிப்பு வகைளில் நெய் தான் முக்கிய பங்கு வகிக்கும். நெய் சேர்த்து செய்தாலே மனம் வீசும். அந்த அளவிற்கு சுவையான நெய்,அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான FDA அமைப்புதான் நெய்க்கு தடை விதித்துள்ளது. உடல் எடை அதிகரிப்பு, மாரடைப்பு வருவதற்கான அபாயம் அதிகம், ரத்த கொதிப்பு வரும் ஆகியவற்றை காரணமாக சொல்லி நெய்க்கு தடை விதித்துள்ளது அமெரிக்கா.
கடுகு எண்ணெய்: இந்தியாவில் சமையலுக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய கண்டத்திலும், அமெரிக்காவில் இந்தியாவின் கடுகு எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுகு எண்ணெய்யில் எருக்கிக்(Erucic) ஆசிட் இருப்பதாலும், இந்த ஆசிட்டால் உடலுக்கு கேடுவிளைக்கும் என ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கடுகு எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கெச்சப்(Ketchup): இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய கெச்சப்க்கு பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் சர்க்கரை இருப்பதாலும், இதனை டீன்ஏஜியினர் அதிகமாக விரும்பி சாப்பிடுவதாலும் தடை அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஜெல்லி(Jelly Cup): இந்தியாவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஜெல்லி இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது.இதில் E425 என்ற ஒருவகை சேர்க்கைகள் கலக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தடிமனாக இருப்பதால், அதை சாப்பிடுவதால் சிக்கிக்கொள்ளும் என்பதால் ஜெல்லிக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read More: வெயில் காரணமாக செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு..!