உப்பை வைத்து உங்கள் முகப்பருக்களை சுலபமாக போக்கலாம்.. எப்படி தெரியுமா??
பல பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று என்றால் அது முகப்பரு தான். இந்த முகப்பருக்கள் நமது அழகை கெடுப்பதுடன், தன்னம்பிக்கையையும் சேர்த்து கெடுத்து விடுகிறது. இதனால் பல ஆயிரங்களை செலவு செய்து பல பெண்கள் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது உண்டு. ஆனால் இனி அதற்க்கு அவசியமே இல்லை. வெறும் உப்பை வைத்து உங்கள் முகப்பருக்களை போக்கலாம் என்று ஃபேஸ் ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இளமையாக இருக்க உங்கள் முகத்தை உப்பில் கழுவுங்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் முகப்பருக்களையும் சுலபமாக நீக்கலாம். இதற்க்கு நீங்கள், அரை கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி உப்பை கரைத்துக் கொள்ளவேண்டும் (கடல் உப்பு என்றால் இன்னும் சிறந்தது). இப்போது இந்த தண்ணீரால், மேக்கப்பைக் கழுவிய பிறகு சுத்தமான முகத்தில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். உங்கள் முகத்தில் ஒட்டியிருக்கும் உப்பு துகள்களை லேசான துணி கொண்டு நீங்கள் அதை துடைக்க வேண்டும்.
இப்போது நீங்கள் தூங்கச் செல்லலாம். இப்போது சிறிது உப்பு துகள்கள் உங்கள் முகத்தில் தான் இருக்கும். அவை அனைத்தையும் முற்றிலுமாக துடைத்து எடுத்துவிட கூடாது. இதனால் காலையில், நீங்கள் பிரகாசமான முகத்துடன் எழுந்திருப்பீர்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் முகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இந்த உப்பு தண்ணீரை, அதிக உணர்திறன் அல்லது வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், நீங்கள் ஆர்வத்தில் அதிக உப்பை கலந்து விட கூடாது. நீங்கள் இந்த முறையை செய்வதற்கு முன்பு, உங்கள் சருமத்திற்கு உகந்ததா என்பதை தெரிந்து கொள்ள, முகத்தின் ஒரு சிறிய இடத்தில் இந்த நீரை பயன்படுத்தி பாருங்கள்.. அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால், அடுத்த நாள் நீங்கள் இதை முகம் முழுவதும் பயன்படுத்தலாம்.
Read more: தன்னிடம் பாசமாக பேசியவரை நம்பிய சிறுமி; காதல் பெயரில் வாலிபர் செய்த காரியம்..