இதை தினமும் சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி அதிகரிக்கும்..!! வெண்டைக்காயை விட பவர் அதிகம்..!!
நமது உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமோ, அதே அளவிற்கு மனநலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். வெளிநாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளில் தினமும் 100 கிராம் பச்சை பட்டாணி சாப்பிட்டு வந்த மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனநிலை மற்றும் உடல் நிலையில் சிறந்த குணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. இது கலோரிகள் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. மேலும் பச்சை பட்டாணி ஜீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை பச்சைப்பட்டாணியில் உள்ள விட்டமின் பி3 (நியாசின்) தடை செய்கிறது. இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடைசெய்கிறது. பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.
பச்சை பட்டாணியை தினமும் 2 மில்லிகிராம் அளவிற்கு சாப்பிட்டு வரும் நபர்களுக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வயதாகும் நபர்களில் சிலருக்கு மூளை செல்கள் மிகவும் வலுவிழப்பதால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரித்து அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். தினமும் குழந்தைகள் மருந்து போல் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட 3 மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.
Read More : வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000..? உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!