For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செந்தில் பாலாஜியை அட்டாக் செய்த சலூன் கடைக்காரர்..!! தட்டிக் கேட்ட உடன் பிறப்புகள்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

In Coimbatore, the police arrested a salon shopkeeper for posting slanderous comments against Minister Senthil Balaji like 5-party Ammavasai.
11:25 AM Oct 11, 2024 IST | Chella
செந்தில் பாலாஜியை அட்டாக் செய்த சலூன் கடைக்காரர்     தட்டிக் கேட்ட உடன் பிறப்புகள்     கடைசியில் நடந்த ட்விஸ்ட்
Advertisement

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 5 கட்சி அம்மாவாசை போன்ற அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக சலூன் கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்டவர் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த விஸ்வேஷ்குமார் (40) என்பது தெரியவந்துள்ளது. இவர், கோவை மாநகரில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார்.

Advertisement

இவர், தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் ராஜமாணிக்கம், விஸ்வேஸ்குமாரிடம் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதையடுத்து, ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விஸ்வேஸ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர் ராஜமாணிக்கம் (47) என்பவர் சாய்பாபா காலனி போலீஸில் புதன்கிழமை இரவு புகாரளித்தார். அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிராக விஸ்வேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் புதன்கிழமை மாலை தவறான செய்தியைப் பதிவிட்டதாக அவர் கூறினார். இதுகுறித்து ராஜமாணிக்கம் விஸ்வேஷ்குமாரிடம் விசாரித்தபோது, ​​அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், விஸ்வேஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விஸ்வேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

Read More : எல்லாம் போச்சு..!! மிகப்பெரிய சைபர் அட்டாக்..!! உடனே பாஸ்வேர்டுகளை மாத்துங்க..!!

Tags :
Advertisement