For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை விற்பனை...! முழு விவரம்

Sale of Arava copra at minimum support price to farmers
07:45 AM Oct 11, 2024 IST | Vignesh
விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை விற்பனை     முழு விவரம்
Advertisement

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை விற்பனை செய்து பயன்பெறலாம்.

Advertisement

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; வேளாண் உற்பத்தியினை பெருக்கி, விவசாயப் பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பு 2024-25-ஆம் ஆண்டு தென்னை விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கத்தில், ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நடப்பு 2024-25-ஆம் ஆண்டு விலை ஆதரவு திட்டம் இரண்டாம் கட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட சேலம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சேலம், வாழப்பாடி மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக அரவைக் கொப்பரை 910 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரவைக் கொப்பரை விளைபொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து. ஈரப்பதம் 6% க்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து அயல் பொருட்கள் கலப்பின்றி கொண்டுவர விவசாயிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான அரவை கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.111.60 வீதத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் டிசம்பர்-2024 மாதத்தின் 2-ஆம் வாரம் முடிய அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சேலம், வாழப்பாடி மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம். தென்னை விவசாயிகளுக்கு நல்ல இலாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தினை விவசாய பெருமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement