ரேஷன் கடைகளில் விற்பனைக்கு வருகிறது புதிய பொருட்கள்..!! அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?
ஆவின் பால் பொருட்களை ரேஷன் கடையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் மற்றும் துணை பதிவாளர்கள் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆவின் பொருட்களை தீவிர சந்தைப்படுத்துதல் முயற்சியில் ஈடுபடுவதற்கான உத்தரவுகளை வழங்கியுள்ளோம். ரேஷன் கடைகள் மூலம் ஆவின் பொருள்களை விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல், புதிய ப்ராடக்ட் தேவைப்படுகிறது. அதை மார்க்கெட்டில் ரெடி செய்து புதிய ப்ராடக்டை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறாம். இந்த மாதத்தில் ஒரு சில புதிய ப்ராடக்ட் உருவாக்க இருக்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு பால் கொள்முதல் செய்திருக்கிறோம். ஒரு நாளில் 38 லட்சம் லிட்டர் அளவுக்கு கொள்முதல் பெருகி இருக்கிறது. பாலின் அளவு குறையாமல் பால் வளர்ச்சியை பெருகக் கூடிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
ரேஷன் கடையில் பால் விற்பனை அல்ல, பால் பொருட்கள் விற்பனை தான் செய்யவுள்ளோம். அது எந்த அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. வெகு விரைவில் ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் கொண்டுவர உள்ளோம். பணிக்கு வரக்கூடிய பெண்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கிருஷ்ண ஜெயந்திக்கு டிஸ்கவுன்ட்டில் ஆவின் பொருள்களை விற்பனை செய்தோம். எல்லா விழா நாட்களிலும் இதுபோன்று விலை குறைவாக பொருட்கள் விற்கப்படும். பொருளின் தரத்தை உயர்த்தி அதிக அளவில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Read More : ‘இனி ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே’..!! ‘இதை மறந்துறாதீங்க’..!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!!