தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்.! இந்தியாவில் சம்பளம் 9.5% அதிகரிக்கும்; இன்ஃப்ரா, உற்பத்தித் துறைகள் அபார வளர்ச்சி.! வெளியான அறிக்கை.!
உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி போன்ற தொழில்கள் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் காட்டுவதால், இந்தியாவில் இந்த ஆண்டு சம்பளம் 9.5 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதன்கிழமை வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலகளாவிய திறன் மையங்கள் நாட்டில் 9.8 சதவிகிதம் ஊதிய உயர்வைக் காணும் என எதிர்பார்க்கப்பட்டாலும், உற்பத்தித் துறையில் 10.1 சதவிகிதம் மற்றும் வாழ்க்கை அறிவியலில் 9.9 சதவிகிதம் சம்பளம் அதிகரிக்கும் என்று உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமான AON-இன் அறிக்கை தெரிவிக்கிறது.
நிதி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 9.9% ஊதிய உயர்வை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தொழில் நுட்பத் துறை சேவை துறை மற்றும் தயாரிப்புகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு 9.5% ஊதிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1414 நிறுவனங்கள் மற்றும் 45 தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது.2022ல் 21.4 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தேய்வு விகிதம் 2023ல் 18.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியத் துறையில் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வு இந்திய நிலப்பரப்பில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை குறிப்பதாக 'AON' நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரூபாங்க் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பழமைவாத உணர்வுகள் இருந்த போதிலும்உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி போன்ற தொழில்கள் வலுவான வளர்ச்சியைத் தொடர்கின்றன, இது சில துறைகளில் இலக்கு அடிப்படையில் முதலீடு செய்வதன் அவசியத்தை குறிக்கிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
திறனை மேம்படுத்துவதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் நேர்மறையான சுழற்சியை உருவாக்கும் நோக்கில் வளங்களை வழிநடத்த அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு வீழ்ச்சி குறைவது சாதகமாக அமைந்திருக்கிறது.
தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் 2024 ஆம் வருடத்திற்கு தயாராகும்போது தொழிலாளர்களுக்கு ஆதரவான பணி சூழலை உருவாக்கி அதன் மூலம் வேலை சந்தையில் பணியாளர்களின் ஈடுபாட்டை அதிகப்படுத்துவது நோக்கமாக இருக்கிறது என AON நிறுவனத்தின் திறமை தீர்வுகளுக்கான இயக்குனர் ஜங் பகதூர் சிங் கூடியிருக்கிறார்.