சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.! பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.! புதிய கட்டுப்பாடுகள் அமல்.!
தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் கூட்டமிருப்பதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்ததோடு மூச்சுத் திணறலால் சிலர் இறந்த சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன .
இந்நிலையில் வருகின்ற 27ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் குருபூஜை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பல புதிய கட்டுப்பாடுகளை தேவசம் போர்டு நியமித்திருக்கிறது. இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி காலை 11 மணிக்குள் வாகனங்களில் வருபவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. 11 மணிக்கு பிறகு வருபவர்கள் 3 மணி நேரம் காத்திருந்து பின்பு தான் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும் 27 ஆம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும் எனவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை வரை ஐயப்பன் கோவிலுக்கு 26 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி மாதத்தில் இருந்து ஸ்பாட் புக்கிங் முறையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.