முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காங்கிரஸ் கட்சி நடத்துவதே தேர்தலில் சீட் கேட்க மட்டும் தான்...! மீண்டும் மோடியே பிரதமர்...

06:00 AM Feb 06, 2024 IST | 1newsnationuser2
Advertisement

இளைஞர்களுக்கு கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் இல்லை.

வந்தவாசி தொகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; தமிழக அரசியல், ஐம்பது ஆண்டுகளாக, ஊழல், ஜாதி, குடும்ப அரசியல், அடாவடித்தனம் இவற்றை மையமாகக் கொண்டே நடக்கிறது. இளைஞர்களுக்கு கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற, அனைவருக்குமான அரசியல் மாற்றம் உருவாக வேண்டுமானால், அது பாஜகவால் மட்டும்தான் முடியும். பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில், பாரதத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுத்திருக்கிறோம். 500 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, அனைவரின் ஒப்புதலையும் பெற்று, நீதிமன்றம் வாயிலாக குழந்தை ராமர் கோவில் அமைத்திருக்கிறோம்.

Advertisement

பழங்குடி இனத்திலிருந்து முதல் குடியரசுத் தலைவர் நியமிக்கப்பட்டு, உண்மையான சமூக நீதியைக் கொண்டு வந்திருக்கிறோம். நாட்டின் உயரிய பத்ம விருதுகள், சாமானிய மக்களிள் சாதனையாளர்களைச் சென்றடைகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் அரசியல் தலைகீழாக மாறியிருக்கிறது. ஏழை மக்களை நோக்கி, சாமானியர்களை மையப்படுத்தி நமது அரசு நடக்கிறது.

வந்தவாசி அருகே மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க, 3,174 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலத்தைக் கையகப்படுத்த திமுக அரசு முயன்றபோது, எதிர்த்துப் போராடிய மேல்மா விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போட்டது திமுக அரசு. அதனை எதிர்த்து பாஜக கண்டனக்குரல் கொடுத்ததால், குண்டாஸ் சட்டத்தை விலக்கிக் கொண்டனர். விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு தொடரும் ஒரே கட்சி திமுகதான்.

2022-23ஆம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகை 663 கோடி ரூபாய் நிதியை, நமது மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கிவிட்டது. ஆனால், திமுக அரசு அந்த நிதியை விவசாயிகளுக்கு இன்னும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், 2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகையை, விவசாயிகளுக்கு இன்னும் வழங்காததால், திமுக அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். திமுக எப்போதுமே விவசாயிகளின் எதிரியாக தான் செயல்பட்டு வருகிறது.

வந்தவாசி மக்களிடம் அதிக வட்டி தருகிறோம் என்று மக்கள் பணத்தைச் சுருட்டியிருக்கும் நிறுவனங்களால், மக்களோடு, அப்பாவி முகவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை சென்றதும், காவல்துறை தலைமை இயக்குனரைச் சந்தித்து, இந்த நிறுவனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக சார்பாக மனு கொடுக்க உள்ளதாக கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு இந்த நாட்டை ஆளத் தகுதி இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடத்துவதே தேர்தலில் சீட் கேட்க மட்டும்தான் என்று திமுக அமைச்சரே கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காரர்களே கூட்டம் போட்டு, தற்போதைய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருக்கு தேர்தல் சீட் கொடுக்காதீர்கள் என்று போராடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். தொண்டர்கள் இல்லை என்றார்.

Tags :
annamalaiBJPCONGRESSDmkmodi
Advertisement
Next Article