For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”கூடவே சுத்திட்டு இருந்தியே செவ்வாழ”..!! நண்பனுக்கு வைத்த பயங்கர ட்விஸ்ட்..!! மனைவியுடன் ஒரே ஓட்டம்..!!

Wife, children, property documents, gold jewelry, car, and money must be returned.
11:21 AM Jan 08, 2025 IST | Chella
”கூடவே சுத்திட்டு இருந்தியே செவ்வாழ”     நண்பனுக்கு வைத்த பயங்கர ட்விஸ்ட்     மனைவியுடன் ஒரே ஓட்டம்
Advertisement

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாபுராவை அடுத்த நந்தகடாவை சேர்ந்தவர் 33 வயதாகும் ஆசிப். ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவியின் பெயர் மாசாவி (28). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு மாஹிரா (7), அனியா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மாசாவிக்கும் பெலகாவி மாவட்டம் கானாபுராவை அடுத்த மாரிகாலாவை சேர்ந்த பசவராஜ் (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

நண்பர் என்ற முறையில் அடிக்கடி பசவராஜ் வீட்டிற்கு வந்து போன நிலையில், நண்பனுடன் இருந்த நட்பு, அவரது மனைவியான மாசாவி உடனும் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதால், மாசாவியுடனான பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் ஆசிப்புக்கு கடைசி வரை தெரியவே இல்லை. கடந்த புத்தாணடு நாளான ஜனவரி 1-ம் தேதி மாசாவி தனது 2 குழந்தைகளுடன், கள்ளக்காதலன் பசவராஜுடன் வீட்டை விட்டே ஒடிவிட்டார்.

கள்ளக்காதலனுடன் செல்லும்போது கணவர் ஆசிப்பின் கார், 2 சொத்து ஆவணங்கள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார். இதையறிந்து ஆசிப் அதிர்ச்சி அடைந்தார். தனது நெருங்கிய நண்பர் பசவராஜ், இப்படி செய்ததை எண்ணி மனம் உடைந்தார். இதுகுறித்து ஆசிப், தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் பசவராஜ் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அதில் மனைவி, குழந்தைகள் மற்றும் சொத்து ஆவணங்கள், தங்க நகை, கார், பணத்தை மீட்டுத்தர வேண்டும். பசவராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர். இந்த கள்ளக்காதல் ஜோடி ஓடிப்போன சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : உயிரை காவு வாங்கிய எலுமிச்சை மரணம்..!! தூக்கி வீசப்பட்ட 26 வயது இளம்பெண்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

Tags :
Advertisement