முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தூள்...! அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு ரூ.75,000 நிதியுதவி...! தமிழக அரசு அறிவிப்பு...!

05:30 AM Feb 06, 2024 IST | 1newsnationuser2
Advertisement

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை கருத்தில் கொண்டு ஆசிரியர் நல நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை; ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பிற்கு ரூ.5,000/-ம், பட்டயப்படிப்பிற்கு ரூ.2500/-ம் கடந்த 2021-2022ம் கல்வியாண்டு வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், பட்டப்படிப்பிற்கு ரூ.10,000/-ஆகவும், பட்டயப்படிப்பிற்கு ரூ.5,000/- ஆகவும் உயர்த்தி 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் குழந்தைகள் (ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும்) உயர் கல்வி பயில்வதற்கு கல்வி கட்டணத் தொகையாக (Tuition fees) ரூ.50,000/-ம் தொழிற்கல்வி பட்டயப்படிப்பிற்கு ரூ.15,000/-ம் வழங்குவதற்கான நிபந்தனைகளைத் தெரிவித்து அதனடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் குழந்தைகளை தெரிவு செய்ய மாநில அளவில் குழு அமைக்க அனுமதி அளித்து ஆணை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Edu departmentstafftn governmentTution fees
Advertisement
Next Article