For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கூகுள் மேப்பை இப்படி பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம்..! தவிர்ப்பது எப்படி..? லைவ் லொக்கேஷனை ஷேர் செய்வது எப்படி..?

06:06 AM May 21, 2024 IST | Kathir
கூகுள் மேப்பை இப்படி பயன்படுத்தினால் ரூ 5 000 அபராதம்    தவிர்ப்பது எப்படி    லைவ் லொக்கேஷனை ஷேர் செய்வது எப்படி
Advertisement

சமீப காலமாகவே கூகுள் மேப்-களின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டது. இதற்கு காரணம், எந்த பொதுப்போக்குவரத்தில் நாம் பயணம் செய்தாலும், நாம் செல்ல வேண்டிய இலக்குக்கான வழியை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிய உதவுகிறது கூகுள் மேப். அத்துடன் சரியான நேரத்தில் வேறு பாதையை தேர்ந்தெடுத்து, வாகன நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல், செல்லவே நமக்கு இந்த கூகுள் மேப் உதவுகிறது.

Advertisement

மேலும், தனிநபர்களின் நடமாட்டத்தையும் இந்த கூகுள் மேப் மூலம் அறியலாம். ஆனால், தனிநபர் ஒருவரை அவரது அனுமதியின்றி இப்படி டிராக் செய்வது சட்டவிரோதமாகும். எனவே, நமக்கு நெருக்கமானவர்கள், உறவினர்களை வேண்டுமானால் அவர்களின் அனுமதியுடன் டிராக் செய்யலாமே தவிர, பிறரை டிராக் செய்வது குற்றமாகும். அதேபோல, ஒருவரது லைவ் லொக்கேஷனை, வாட்ஸ் அப் மூலமாக ஷேர் செய்யலாம்.

முதலில், கூகுள் மேப் செயலிக்குள் நுழைந்து, “profile picture” என்று டைப் செய்ய வேண்டும். பிறகு Location Sharing என்பதையும், Add People என்பதை டைப் செய்ய வேண்டும்.

இப்போது Sharing Time, Contact என்ற ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பிட்ட நபரிடம் கூகுள் அக்கவுண்ட் இல்லையென்றால், Add People என்ற மெனுவில் Location Sharing Link என்பதை பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த லிங்கை காப்பி செய்து, மெசேஜிங் ஆப் அல்லது மெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்.

ஐபோன் பயன்படுத்துவராக இருந்தால், லொகேஷன் ஷேர் செய்வது எப்படி தெரியுமா? Google Contact List-ல் அவர்களது ஜி-மெயில் முகவரியை இணைக்க வேண்டும். பிறகு, உங்கள் டிவைஸில் கூகுள் மேப் செயலிக்குள் நுழைந்து, உங்கள் Profile Picture மீது டைப் செய்ய வேண்டும்.

இப்போது Location Sharing என்பதை கிளிக் செய்து, Add people, Time Duration-ஐ தீர்மானித்துக் கொள்ளலாம். இறுதியில், காண்டாக்ட்ஸ்களை கூகுள் மேப்புடன் ஷேர் செய்ய பர்மிஷன் தந்தால் போதும்.

அதேபோல, உங்களது காரில் டாஷ் போர்டில் மொபைல் ஹோல்டரை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஹோல்டரில் வைக்காமல் கையில் போனை வைத்துக்கொண்டு கூகுள் மேப்பை பார்த்தால், அது வாகன விதிச் சட்டத்தின் மீறலாக கருதப்படுகிறது.

இதற்கு 5,000 ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டியிருக்கும். மொபைல் ஹோல்டர் வைக்க பைக்குக்கு 200 ரூபாய் வரையும், காருக்கு 1000 ரூபாய் வரையும் செலவாகும். இதை பொருத்தி விட்டாலே, 5000 ரூபாய் அபராதம் செலுத்த தேவையில்லை.

Tags :
Advertisement