நாளை முதல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு..!! இன்றே முந்திக் கொள்ளும் வாடிக்கையாளர்கள்..!! நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க..!!
நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இதில், ஜியோ தான் நாட்டில் முன்னணியில் உள்ள நிறுவனமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் இருக்கிறது. இதற்கு அடுத்து வோடபோன் ஐடியா நிறுவனமும், பிஎஸ்என்எல் (பொதுத்துறை நிறுவனம்) ஆகியவை உள்ளன.
இந்நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஜூலை 3ஆம் தேதி முதல் ரீசார்ஜ் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன. இதனால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், பழைய திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய இன்றே (ஜூலை 02) கடைசி நாளாகும். விலை உயர்வில் இருந்து தப்பிக்க, பலரும் விலை உயர்வுக்கு முன்னதாக ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அதன்படி, தற்போதைய பிளான் முடிந்த உடன் புதிதாக ரீசார்ஜ் செய்த பிளேன் ஆக்டிவேட் ஆகும்.
Read More : உங்களுக்கு இன்னும் ரூ.1,000 வரவில்லையா..? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? உடனே இதை பண்ணுங்க..!!