முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.33 கோடி பரிசு!... உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணிக்கு ஐசிசி அறிவிப்பு!

07:01 AM Nov 15, 2023 IST | 1newsnationuser3
Advertisement

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.

லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

கொல்கத்தாவில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன. இந்நிலையில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகள், நவ.19ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டி ஆகியவை மழையின் காரணமாக தடைபெற நேரிட்டால் ரிசர்வ் டே முறையில் அடுத்த நாட்களில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.83 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 16.5 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ICC AnnouncesRs. 33 Crore Prizeஉலகக்கோப்பை தொடரை வெல்லும் அணிஐசிசி அறிவிப்புரூ. 33 கோடி பரிசு
Advertisement
Next Article