முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இவர்களுக்கு ரூ.3,000 பொங்கல் கருணைக் கொடை, தமிழக அரசு அதிரடி..!

07:44 AM Jan 11, 2024 IST | 1Newsnation_Admin
Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.3,000 வழங்கப்படும் என்று தம இழக்க அரசு அறிவித்துள்ளது.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க, கடந்த 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட அனைத்து கோயில் பணியாளர்களுக்கும், பொங்கல் கருணைக் கொடையாக 3,000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.

இந்த 3,000 ரூபாய் பெற கோயில் பணியாளர்கள், 2022 – 23ஆம் ஆண்டில் 240 நாட்கள் மற்றும் அதற்கு மேலாக பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால், 240 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்தோருக்கு, அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில், இத்தொகை வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
pongal giftTN newsபொங்கல் கருணைக் கொடை
Advertisement
Next Article