குடும்பத் தலைவிகளுக்கு ரூ.3,000 உரிமைத்தொகை..!! அதிரடியாக அறிவித்த அதிமுக..!!
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
* ஆளுநர் பதவி தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும்.
* உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
* மகளிர் உரிமைத் தொகை மாதம் 3,000 ரூபாய் வழங்க வலியுறுத்துவோம்.
* பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்துவோம்.
* குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
* வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.
* குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களை உட்படுத்த வேண்டும்.
* நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை வேண்டும்.
* முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்.
Read More : தேர்தல் வாக்குப்பதிவின்போது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!