For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பத்ம விபூஷன் முதல் மன்னர் அப்துல் அஜீஸ் விருது வரை".. மன்மோகன் சிங் வாங்கிய விருதுகளின் முழு விவரம்...

From Padma Vibhushan to King Abdul Aziz Award.. Full Details of Dr. Manmohan Singh's Awards
11:57 PM Dec 26, 2024 IST | Kathir
 பத்ம விபூஷன் முதல் மன்னர் அப்துல் அஜீஸ் விருது வரை    மன்மோகன் சிங் வாங்கிய விருதுகளின் முழு விவரம்
Advertisement

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர் 26ஆம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானர். 92 வயதான டாக்டர் மன்மோகன் சிங் இரண்டு முறை (பத்து ஆண்டுகளாக) இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர்.

Advertisement

தற்போது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள கா, பஞ்சாப்பில் 1932 அன்று சீக்கிய குடும்பத்தில் மன்மோகன் சிங் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவில் குடிப்பெயர்ந்தனர். இவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். முதல் முதலாக 1991ம் ஆண்டு, எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங், 1998 முதல் 2004 வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.

டாக்டர் மன்மோகன் சிங் 1991-96 ஆம் ஆண்டில் PV நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தில் நிதி அமைச்சராக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் தான் இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது. மேலும் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக் குழுவின் துணைத் தலைவர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், இந்திய அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், கல்வியாளர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த டாக்டர் மன்மோகன் சிங் பெற்ற விருதுகள் குறித்து பார்ப்போம்.

1987 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான 'பத்ம விபூஷன்' பெற்றார். 1995 இல் ஜவஹர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது. 2002 இல் இந்திய நாடாளுமன்றக் குழுவிடமிருந்து சிறந்த நாடாளுமன்றவாதி விருதைப் பெற்றார். கேம்பிரிட்ஜில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் இருந்து 1995 மற்றும் 1996 ஆம் ஆண்டு முறையே சிறப்பான செயல்திறனுக்கான ரைட் பரிசு மற்றும் ஆடம் ஸ்மித் பரிசையும் பெற்றார்.

டாக்டர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வாங்கிய விருதுகள்: 2010ல் சவுதி அரேபியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான 'ஆர்டர் ஆஃப் கிங் அப்துல்அஜிஸ்' விருதை பெற்றுள்ளார். 2014 இல் ஜப்பானின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவமாகும் 'ஆர்டர் ஆஃப் தி பவுலோனியா ஃப்ளவர்ஸ்' கிராண்ட் கார்டன் என்றும் அழைக்கப்படும் விருதை பெற்றார்.

மேலும் ஃபோர்ப்ஸ் இதழின் படி, டாக்டர் சிங் 2011 இல் உலகின் 19 வது சக்திவாய்ந்த நபராகவும், 2012 இல் 20 வது சக்திவாய்ந்த நபராகவும், 2013 இல் உலகின் 28 வது சக்திவாய்ந்த நபராகவும் இருந்தார். இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more: “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது” -பிரதமர் மோடி இரங்கல்..!

Tags :
Advertisement