முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 பணம்..!! தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..!!

10:37 AM Jan 03, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அரிசி, சர்க்கரையுடன் கரும்பு, நெய் உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு எதிர்வரும் பொங்கலுக்கு தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்.

Advertisement

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதால் ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகையுடன் ரூபாய் 1,000 திமுக அரசால் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு பரிசு தொகுப்பு திட்டத்தில் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மக்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொங்கல் பரிசு தொகுப்புடன் 3,000 ரூபாய் ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் ரொக்கம் குறித்து அறிவிக்கப்படாதது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், பொங்கல் பரிசு தொகுப்புடன் பொதுமக்களுக்கு ரூபாய் 3,000 ரொக்கம் சேர்த்து வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ஓ.பன்னீர்செல்வம்தமிழ்நாடு அரசுபொங்கல் பண்டிகைரொக்கம்
Advertisement
Next Article