For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக அரசு அதிரடி...! விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 உடனே வழங்க வேண்டும்...!

06:20 AM May 02, 2024 IST | Vignesh
தமிழக அரசு அதிரடி     விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ 25 000 உடனே வழங்க வேண்டும்
Advertisement

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு , பலத்த காயம், சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் மாணவர்களுக்கு நிவாரணத் தொகை உடனடியாக வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு , பலத்த காயம், சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் மாணவர்களுக்கு ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக, உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ. 1,00,000 வழங்கப்படும். அதே போல பலத்த காயம் ஏற்பட்டால் ரூ. 50,000 வழங்கப்படும் . சிறிய காயம் ஏற்பட்டால் ரூ. 50,000 நிவாரணத் தொகை வழங்கப்படும்.

தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் , அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டு பாதிப்பு அடைந்தாலோ அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு நிவாரணத் தொகை வழங்கிட கருத்துருக்கள் சார்நிலை அலுவலர்களின் பரிந்துரையுடன் பெறப்பட்டு , அவை உரிய விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement