முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் UPSC முதன்மை தேர்வுக்கான ரூ.25,000 ஊக்கத்தொகை..! எப்படி பெறுவது...?

Rs.25,000 Incentive for UPSC Mains Exam under “I am First” scheme
06:25 AM Jul 22, 2024 IST | Vignesh
Advertisement

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

Advertisement

கடந்த 2022-23-ம் ஆண்டு தமிழக பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையானவசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒருதிட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 1,000 சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2024) யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து 28.07.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

Tags :
Naan mudalvanScholarshiptn governmentupsc exam
Advertisement
Next Article