பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,000 பணம்..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 ரொக்கம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் பொதுநல மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ”பெரும் மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வாழ்வாதாரம், பொருளாதாரத்தை இழந்து, சோகத்தில் ஆழ்ந்துள்ள விவசாயிகளுக்கும், ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக ரூ. 2000 வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு” கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பொங்கல் திருநாளுக்கு பரிசு தொகுப்புடன் மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்கினால், மகிழ்ச்சிதான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு. ரொக்கப் பணம் ரூ. 2000 வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழ்நாடு அரசின் நிதி நிலைமையில் நெருக்கடி என்று கூறிய அரசு, இந்தாண்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க முடியவில்லை என்று கூறியது. இருப்பினும், பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : Khel Ratna | மனு பாக்கர், குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது..!! கௌரவித்த குடியரசுத் தலைவர்..!!