வங்கிக் கணக்குகளுக்கு நாமினி கட்டாயம்..!! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!! ஏன் அவசியம் தெரியுமா..?
வங்கிகளில் அனைத்து விதமான கணக்குகளுக்கும் நாமினி கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பல NBFC வங்கிகளில் டெபாசிட் அக்கவுண்டுகளுக்கு நாமினி விவரங்கள் பெறப்படுவதில்லை. இதனால், கணக்கு வைத்திருப்போரின் மறைக்குப் பின் உறவினர்கள் அந்தப் பணத்தை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண, அனைத்து கணக்குகளுக்கும் நாமினி அவசியம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நாமினி ஏன் அவசியம்..?
வங்கி கணக்குகள் மற்றும் வைப்புத் தொகை திட்டங்களுக்கான படிவங்கள் அனைத்திலும் நாமினி நியமனம் என்பது கட்டாயமாக நிரப்ப வேண்டிய ஒன்றாகும். நாமினி நியமனம் என்று ஒன்று இருந்தால், வங்கிகள் இறந்தவரின் கணக்கில் உள்ள மீதித் தொகையை நாமினிக்கு எளிதாக வழங்கலாம். நாமினி இருந்தால் மரபுரிமை சான்றிதழோ, சட்டப்பூர்வமான நாமினி என்று உறுதி செய்து கொள்வதற்கான வேறு எந்த ஆவணங்களோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கிகள் நிர்ப்பந்திக்காது. ஆனால், இறப்புச் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நாமினி நியமன வசதி என்பது இறந்து போன வைப்புத் தொகையாளருக்குப் பின் யாருக்கு வட்டித் தவணை செல்ல வேண்டும் என்று தெளிவுபடுத்தி விடுவதால், வங்கிகள் அன்னாரின் நிதி உடமைகளை தீர்வு செய்யும் முறை எளிதாகிறது. எனினும் வங்கிக் கணக்கு, வைப்புத் தொகை அல்லது பெட்டகத்திற்காக ஆவண செய்யும்போது, நாமினி நியமனத் தகவலை குறிப்பிட வேண்டும் என்று வங்கிகள் நிர்ப்பந்திப்பது இல்லை. அதனால் வாடிக்கையாளர்கள், நியமன படிவத்தை கேட்டு வாங்கி நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் வைப்புத் தொகை அல்லது வங்கி கணக்கிற்கு நியமனம் செய்யப்பட்ட நாமினிக்கு எளிதாக இருக்கும்.