பதவிக்கு ரூ.15 லட்சமா..? இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!! நேரடியாக விசாரணை நடத்தும் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதேபோல், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதில், கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து விஜய் அறிவித்தார். இது அப்போது, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இதற்கிடையே, தவெக-வில் நிர்வாகிகள் நியமனமும் ஒருபக்கம் நடந்து வருகிறது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டம் தோறும் புதிய அலுவலகங்களை திறந்து வைத்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பனையூர் கட்சி அலுவலகத்தில் மீட்டிங் நடந்தது. சட்டமன்றத் தேர்தல் 2026இல் நடக்கவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தலைவர் விஜய் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, நிர்வாகிகளின் நியமனத்திற்கு ரூ.15 லட்சம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதால், அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், இக்கூட்டத்தில் விஜய்யே நேரடியாக கலந்து கொண்டு அறிவுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : இயற்கையான முறையில் குடலை சுத்தம் செய்ய இதை ஃபாலோ பண்ணுங்க..!! எந்த பிரச்சனையும் வராது..!!