19 பொறுப்பாளர்கள் நியமனம்..!! தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் சந்திக்கும் நிகழ்வு பனையூரில் இன்று நடைபெற்றது. அப்போது புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். மேலும், புதிய நிர்வாகிகளை நியமிக்க மாவட்ட செயலாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. அதுபோன்ற புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் பதவி பறிக்கப்படும் என்றும் விஜய் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கட்சியின் பதவி பெற ரூ.15 லட்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விஜய் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய https://www.dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=1&st=75kfq593&dl=0 என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
Read More : ”கண்டிப்பா நீங்க வரணும்”..!! திடீரென விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!