For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2024-25- ல் தமிழ் மொழி மேம்படுத்த ரூ.1430 லட்சம் ஒதுக்கீடு...! மத்திய அரசு தகவல்...!

Rs. 14 crore allocated for improving Tamil language in 2024-25...! Central Government Information
06:10 AM Dec 06, 2024 IST | Vignesh
2024 25  ல் தமிழ் மொழி மேம்படுத்த ரூ 1430 லட்சம் ஒதுக்கீடு     மத்திய அரசு தகவல்
Advertisement

செம்மொழிகளைப் பாதுகாக்க மற்றும் மேம்படுத்த 2024-25- ல் தமிழ் மொழிக்கு மட்டும் ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் 11 மொழிகளை செம்மொழிகளாக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ் 2004, சமஸ்கிருதம் 2005, தெலுங்கு 2008, கன்னடம், மலையாளம் 2013, ஒடியா 2014, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி 2024 ஆகிய மொழிகளை செம்மொழியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. செம்மொழிகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் மூலம் நிதி வழங்குகிறது. ஆண்டு வாரியாக செம்மொழி தமிழுக்கு வழங்கப்பட்ட நிதி நிதி குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2020-21 - ரூ.1200.00, 2021-22 - ரூ. 1200.00, 2022-23 - ரூ. 1200.00, 2023-24 - ரூ. 1525.00, 2024-25 - ரூ. 1430.00 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய அரசு நிறுவியுள்ளது. இது கருத்தரங்குகள், பயிலரங்குகள், குறுகியகாலத் திட்டங்கள் மற்றும் திருக்குறளை இந்தியா வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை நடத்துகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை பார்வையற்றோர் அறியும் வகையில் 41 செவ்வியல் நூல்களை பிரெய்லி மொழியில் மாற்றியுள்ளது.

என்சிஇஆர்டி உடன் இணைந்து, தமிழ் மொழியை மேம்படுத்துவதற்காக பிஎம்-இ வித்யா தமிழ் அலைவரிசையையும் தொடங்கியுள்ளது. மத்திய அரசு மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் மூலம் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கிறது. இப்பல்கலைக்கழகங்களுக்கு சமஸ்கிருத மொழி பயிற்றுவித்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பட்டம், பட்டயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Tags :
Advertisement