முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அனைவருக்குமே ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் புதிய அறிவிப்பு..!!

02:31 PM Jan 09, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Tags :
பொங்கல் திருநாள்பொங்கல் பண்டிகைபொங்கல் பரிசுத்தொகைமுதல்வர் முக.ஸ்டாலின்ரேஷன் அட்டைதாரர்கள்
Advertisement
Next Article