பரபரப்பு.. பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கைது..!! என்ன விவகாரம்..?
பழநியில் தனியார் மதுபாரில் கட்சியினருடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து மதுரையில் பாஜ மகளிரணி சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதில் கலந்துகொள்ள பழநியில் இருந்து புறப்பட்ட பாஜ மகளிரணியினரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
கைதான மகளிர் அணியினரை திண்டுக்கல் மாவட்ட பாஜ தலைவர் கனகராஜ் தலைமையில் அந்த கட்சியினர் சந்திக்க முயன்றனர். ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போலீசார்-பாஜவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கனகராஜ் தலைமையில் பாஜகவினர் அருகே உள்ள தனியார் மதுபான பாருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். திமுக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கனகராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Read more ; 2025-ம் ஆண்டில் TNPSC & TRB மூலம் தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்…?