"அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000" யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!!
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பல கல்வி உதவி திட்டங்களையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. முன்னதாக பெண்களுக்குத் திருமண உதவித்தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது பெண்கள் உயர்கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்தத் தொகை அவர்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகிழ்ச்சியை மாணவர்களின் முகத்திலும் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
யார் யாருக்கு கிடைக்கும்?
- தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஆணாக இருக்க வேண்டும்.
- தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களால் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
- அரசு பள்ளியில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும்
- விண்ணப்பதாரர் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆதார் அடையாள அட்டை
பள்ளி தேர்ச்சி பெற்ற உரிய சான்றிதழ்
முகவரிக்கான உரிய ஆதாரம்
வருமான சான்றிதழ்
குடும்ப அடையாள அட்டை
தொலைபேசி எண்
மின்னஞ்சல் முகவரி
வங்கி விவரங்கள்
இந்த திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டவுடன் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
Read more ; ATM -ல் கிழிந்த பணம் வந்து விட்டதா? அடுத்த நொடி என்ன செய்ய வேண்டும் தெரியுமா?